
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஒவ்வோர் ஆண்டும் போக்குவரத்து அமைச்சுக்கு வரும் 400 கோடி ரிங்கிட் வருமானத்தில் பாதியை ஈட்டித் தரும் சாலைப் போக்குவரத்து உரிமத்தை ரத்து செய்ய திட்டமில்லை என்று அமைச்சர் Anthony Loke Siew Fook (அந்தோணி லோக் சியூ ஃபூக்) தெரிவித்துள்ளார்.
நாட்டின் வருமானத்திற்குப் பெரும் பங்காற்றி வரும் சாலைப் போக்குவரத்து உரிமத்தை ரத்து செய்தால், அரசாங்கத்தின் வருமானம் குறையும் நிலை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.
உரிமத்தைக் காரின் கண்ணாடியில் ஒட்டுவதை விடுத்து, அதனை டிஜிட்டல் முறையில் பெற்றுக் கொள்ள வேண்டுமென அவர் அறிவித்த பின்னர், பல தரப்பினர் வாகன போக்குவரத்து உரிமத்தை முற்றாக ரத்து செய்ய வேண்டுமென அமைச்சை வலியுறுத்தி வருகின்றனர்.
