29.6 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

வாழ்க்கைச் செலவினம் அதிகரிப்புக்கு ஊழலே முக்கிய காரணம்

🔥 Views : 6
👁 Reading Now : 57

🔊To listen to this news in Tamil, Please select the text.

நாட்டில் நிலவும் வாழ்க்கைச் செலவின அதிகரிப்புக்கு ஊழலே முக்கிய காரணமாக இருப்பதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.
பொருள்களின் விலை அதிகமாக இல்லையென்றாலும், ஊழல் நடவடிக்கையினால் அதன் விலை வானளாவ உயர்ந்து வாழ்க்கைச் செலவினத்தை அதிகரிப்பதாக அவர் தெரிவித்தார்.
இதனைக் கட்டுப்படுத்த அரசு எந்தவிதமான ஆக்கப்பூர்வ நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும் வறியவர்கள் போதுமான உணவு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் இன்னமும் நிலவுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
மலேசியாவின் உற்பத்திப் பொருள்களுக்கு வெளிநாடுகளில் பெரும் தேவை இருப்பதால், நாட்டின் பொருளாதாரம் மீட்சி பெற பெரும் வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles