
🔊To listen to this news in Tamil, Please select the text.
பொருளாதார, நிதித்துறையின் மூத்த ஆலோசகர் பதவியிலிருந்து நூருல் இஸ்ஸா அன்வார் பதவி விலகியது வரவேற்கத்தக்கது என்றும் ஆனால், அவரைப் பதவியில் அமர்த்தியதை முதலில் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என ஊழலையும் அணுக்கமானவர்களுக்குச் சலுகை காட்டுவதையும் எதிர்க்கும் சி4 அமைப்பின் தலைவர் புஸ்பன் முருகையா குறிப்பிட்டார்.
அது பற்றிக் குறிப்பிட்ட கிள்ளான் முன்னாள் எம்பி சார்ல்ஸ் சந்தியாகோ, அன்வாரும் அவரது மகளும் மக்களின் கருத்துக்கு இணங்க நல்ல முடிவையே எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
நாட்டின் நிர்வாகத்தில் உதவ முன்வந்துள்ள நூருல் இஸ்ஸாவின் சேவை மனப்பான்மையைப் பாராட்டி, அவருக்குத் நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
