28.5 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

அதிகரித்து வரும் கடனைச் செலுத்த உதவிநிதியைக் குறைத்தாக வேண்டும்

🔥 Views : 6
👁 Reading Now : 48

🔊To listen to this news in Tamil, Please select the text.

நாட்டின் கடன் தொகை ஒன்றரை டிரில்லியனாக அதிகரித்து அது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 82 விழுக்காடாக இருப்பதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். மேற்கண்ட கடனில் 1எம்டிபியின் 1,820 கோடி ரிங்கிட்டின் கடன் தொகையும் அடங்கும்.
கடனைத் திரும்பிச் செலுத்த இதற்கு முன் அமலில் இருந்த பொருள் சேவை வரியான (ஜிஎஸ்டி)யை மீண்டும் கொண்டுவர அரசு திட்டமிடவில்லை என்றும் ஆனால், பரந்த அளவில் நுகர்வோருக்கான வரியை விதிக்க ஆய்வு நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
உதவிநிதியை அத்தியாவசியமாகத் தேவைப்- படுவோருக்கு மட்டுமே அளித்து, அரசின் நிர்வாகச் செலவுகளைக் குறைத்து, நிதி விரயத்தைத் தடுத்து, ஊழல் நடவடிக்கையை முற்றாக ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ள அரசு உறுதி கொண்டிருப்பதாக அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
———————————————-

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles