26.4 C
Kuala Lumpur
Thursday, April 23, 2026

Vetri

சீபீல்ட் ஆலயத்தில் கலகம் விளைவித்த 17 பேரின் விசாரணை 4 ஆண்டுகளுக்குப் பின்னர் முடிவுக்கு வந்தது

🔊To listen to this news in Tamil, Please select the text.

2018ஆம் ஆண்டு சுபாங் ஜெயா, சீபீல்ட் ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தில் நடந்த கலகம் சம்பந்தமான வழக்கின் விசாரணை நேற்று முடிவுக்கு வந்தது.
2018 நவம்பர் 26ஆம் தேதி, காலை 2 மணியிலிருந்து 5 மணி வரை, 17 வங்காளதேசிகள் அபாயகர ஆயுதங்களோடு ஆலய வளாகத்தில் புகுந்து அங்கிருந்த பக்தர்களைத் தாக்கிக் கோரத் தாண்டவம் ஆடி, பல வாகனங்களைத் தீயிட்டுக் கொளுத்தியது நாட்டில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருந்தது.
இந்த வழக்கின் வாதத் தொகுப்பை அரசு, தற்காப்புத் தரப்பினர் சமர்ப்பிக்க வேண்டுமென மாஜிஸ்திரேட் Iskandar Zainol (இஸ்கண்டார் ஸைனோல்) உத்தரவிட்டார்.
இந்த வழக்கு 4 ஆண்டுகள் நடைபெற்று வந்திருப்பதால் 3 மாஜிஸ்திரேட்டுகளும் 4 அரசின் துணை வழக்கறிஞர்களும் அதனை நடத்தி வந்துள்ளனர்.
அந்தச் அசம்பாவிதத்தின்போது தீயணைப்பு வீரர் Adib Mohd Kassim (அடிப் முகமட் காசிம்) என்பவர் கடுமையாகத் தாக்கப்பட்டு, பின்னர் தேசிய இருதய மருத்துவமனையில் மரணமடைந்தது நாட்டையே உளுக்கிய சம்பவமாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles