28.5 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

வெளிநாட்டில் பணம் பதுக்கி வைப்பு: முன்னாள் துணையமைச்சரிடம் விசாரணை

🔥 Views : 6
👁 Reading Now : 46

🔊To listen to this news in Tamil, Please select the text.

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணம் சம்பந்தமான விசாரணையில் முன்னாள் நிதி துணையமைச்சர் ஒருவர் தமது 12 நிறுவனங்களின் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கக் குத்தகையை வழங்கியதன் மூலம் பெறப்பட்ட பெரும் லஞ்சப் பணத்தை அவர் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் விசாரிக்கப்பட்டுள்ளார்.
சில காலத்திற்கு முன்னர், உலகளாவிய வேவு பத்திரிகை அமைப்பு வெளியிட்ட ‘பண்டோரா பேப்பர்ஸ்’ எனும் அறிக்கையில் உலகின் பல முக்கிய பிரபலங்கள், தலைவர்கள், அதிபர்கள், பிரதமர்கள், அமைச்சர்கள் முதலானோர் பெருந் தொகையிலான பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.
அதில் முன்னாள் நிதியமைச்சர் Dr Daim Zainuddin (டைய்ம் ஸைனுடின்), Tengku Zafrul Abdul Aziz (தெங்கு ஸப்ருல் அப்துல் அஸிஸ்), அம்னோ தலைவர் (Ahmad Zahid Hamidi) அமாட் ஸாஹிட் ஹமிடி, செலாயாங் எம்பி (William Leong) வில்லியம் லியோங், ஜோ லோவின் பெற்றோர்களின் பெயர்களும் அதில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles