
🔊To listen to this news in Tamil, Please select the text.
போதைப் பொருள் வழக்கில் உயர்நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இரு இந்திய சகோதரர்களை மேல் முறையீட்டு நீதிமன்றம் நேற்று விடுவித்து தீர்ப்பளித்தது.
ரூபன்ராஜ் சந்தனசாமி (27) மற்றும் நாகராஜா (35) எனும் இரு கார் இழுவை வேலை செய்தவர்கள் 2018 ஏப்ரல் 26ஆம் தேதி கிள்ளான் தாமான் பாயு பெர்டானாவில் பாயு அடுக்குமாடி குடியிருப்பில் 961 கிராம் கேன்னபிஸ் பொதைப்பொருளை வைத்திருந்ததாக ஷா ஆலம் உயர்நீதிமன்றம் 2020 பிப்ரவரி 7இல் மரண தண்டனை விதித்தது.
அத்தீர்ப்பினை மறுஆய்வு செய்த மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஹனிப்பா ஃபரிகுல்லா, அமாட் நஸ்ஃபி யாசின் மற்றும் லிம் சோங் ஃபோங் ஆகியோர் அடங்கிய அமர்வு, உயர்நீதிமன்ற நீதிபதி சாட்சியங்களை முழுமையாக ஆராயாமல் வழங்கிய தீர்ப்பினை ரத்து செய்தனர்.
