
🔊To listen to this news in Tamil, Please select the text.
பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்களைச் சீண்டுவதையும் கடுமையாக விமர்சிப்பதையும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் நிறுத்திக் கொள்ள வேண்டுமென பெர்சத்து தலைவர் முஹிடின் யாசின் எச்சரித்துள்ளார்.
மாநிலத் தேர்தல்களில் தங்களுக்கு எதிராகக் கீழறுப்பு செய்வதை நோக்கமாகக் கொண்டே இம்மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறிய அவர், மக்கள் இதனைக் கவனித்து வருகின்றனர் என்பதை அன்வார் இப்ராஹிம் மறந்து விடக்கூடாதென அவர் கேட்டுக் கொண்டார்.
எனது ஆட்சிக்குப் பின்னர் இஸ்மாயில் சப்ரி பிரதமரானார். இப்போது அவரும் பதவியிழந்து அன்வார் பதவியேற்றுள்ளார். இந்தப் பதவி நிலையற்றது. அன்வாருக்குப் பின்னர் வேறொருவர் பிரதமராக வரலாம் என்பதை உணர்ந்து, எதிர்க்கட்சிகளின் மீது சேற்றை வாரி இறைப்பதைப் பிரதமர் நிறுத்திக் கொள்ள வேண்டுமென்றும் தவறினால், அதன் பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என முஹிடின் எச்சரித்தார்.



