32.9 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

வினோஷினியின் மரணம் சம்பந்தமாக அரசின் மீது குடும்பத்தினர் வழக்கு

🔥 Views : 9
👁 Reading Now : 25

🔊To listen to this news in Tamil, Please select the text.

வட மலேசியா பல்கலைக்கழக மாணவி வினோஷினி சிவகுமார் தங்கும் அறையில் மின்சாரம் பாய்ந்து மரணடைந்தது சம்பந்தமாக இழப்பீடு கோரி அவரின் குடும்பத்தினர் வழக்கைத் தாக்கல் செய்யப் போவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
பிப்ரவரி 1ஆம் தேதி அலோர் ஸ்டார் செஷன்ஸ் நீதிமன்றம் அனுப்பிய கடிதத்தில் வினோஷினியின் மரணம் மின்சாரம் தாக்கியதால் நேர்ந்ததாக மரண விசாரணை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதாக வழக்கறிஞர் எம். மனோகரன் தெரிவித்துள்ளார்.
அந்த மரண விசாரணையைப் பற்றித் தமக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று வினோஷினியின் தகப்பனார் சிவகுமார் தெரிவித்தார்.
இதனையடுத்து, கவனயீனமாக நடந்து கொண்ட பல்கலைக்கழக நிர்வாகத்தினால்தான் தமது மகள் மரணமடைந்ததாகத் தெரிவித்த அவர், இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இது சம்பந்தமாக என்ன நடக்கின்றது என்பது தெரியாமல் உயர்கல்வி அமைச்சர் காலிட் நோர்டின், வினோஷினியின் மரண விசாரணை இன்னமும் நடப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles