
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஜொகூர் பாருவில் 1,500 படுக்கை வசதிகளோடு கூடிய புதிய மருத்துவமனையின் கட்டுமானத்தைப் பார்வையிட்ட சுகாதார அமைச்சர் டாக்டர் Zaliha Mustafa (ஸலிஹா முஸ்தாப்பா), மரியாதை நிமித்தம் ஜொகூர் Sultan Ibrahim Sultan Iskandar, (சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாரை) சென்று கண்டார்.
அந்தச் சந்திப்பின்போது, அரசு மருத்துவ மனையின் மருத்துவச் சேவைகளையும் கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதோடு, சுத்தத்தையும் பராமரிக்க வேண்டுமென சுல்தான் வலியுறுத்தியுள்ளார்.
அச்சந்திப்பின் போது ஜொகூர் பெர்மைசுரி Zarith Sofiah Sultan Idris Shah (ஸாரித் சோஃபியா சுல்தான் இட்ரிஸ் ஷா) சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் எச்.எஸ். ஹர்ஜீட் சிங், ஜொகூர் சுகாதார இயக்குநர் டாக்டர் Dr Aman Rabu (அமான் ராபு) மற்றும் ஜொகூர் ஆட்சிக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.



