33.5 C
Kuala Lumpur
Saturday, July 4, 2026

Vetri

ஜானா விபாவா திட்டத்தில் முஹிடின் ஒரு சந்தேக நபரே!

🔥 Views : 12
👁 Reading Now : 29

🔊To listen to this news in Tamil, Please select the text.

கோவிட் பெருந்தொற்று காலத்தில் பூமிபுத்ரா குத்தகையாளர்களுக்கு வழங்கபப்ட்ட பொருளாதார ஊக்குவிப்புத் திட்டமான Jana Wibawa (ஜானா விபாவா)வின் நிதி முறைகேட்டில் பெரிக்காத்தான் முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் ஒரு சந்தேக நபராகவே கருதப்பட்டு அவர் மீது விசாரணை நடத்தப்படுவதாக ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) நம்பத் தகுந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
தாம் அந்த விசாரணையில் சந்தேக நபராக விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என்று இதற்கு முன்னர் முஹிடின் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தெ ஸ்டிரேயிட்ஸ் டைம்ஸ் பத்திரிகை அவர் சந்தேக நபர் எனும் ரீதியில் விசாரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. மேலும், அப்போதைய நிதியமைச்சர் தெங்கு ஸஃப்ருல் தெங்கு அப்துல் அஸிஸ் இது சம்பந்தமாக விரைவில் விசாரிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அத்திட்டத்தில் பல முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதால் அதனை எம்ஏசிசி விசாரிக்க பணிக்கப்பட்டிருப்பதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles