29.2 C
Kuala Lumpur
Saturday, July 4, 2026

Vetri

🍽️ செராஸில் மக்களுடன் மதிய உணவருந்திய பிரதமர் அன்வார்!

🔥 Views : 1,304
👁 Reading Now : 54

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நேற்று மதிய தொழுகைக்குப் பிறகு கோலாலம்பூரின் செராஸ் பகுதியில் அமைந்துள்ள மேடான் செலெரா செம்பாக்கா உணவக வளாகத்திற்குச் சென்று பொதுமக்களுடன் இணைந்து மதிய உணவருந்தினார்.

மதியம் சுமார் 12.45 மணியளவில் அங்கு வருகை தந்த பிரதமருக்கு பொதுமக்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

அவரை சோன் 4 செராஸ் மக்கள் குடியிருப்பு சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் கோலாலம்பூர் மாநகர மன்ற (DBKL) தலைவர் டத்தோஸ்ரீ ஃபட்லுன் மக் உஜுட் ஆகியோர் வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து, அங்கு திரண்டிருந்த பொதுமக்களுடன் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அன்போடு உரையாடி, அவர்களுடன் கலந்துரையாடியதுடன், மகிழ்ச்சியான சூழலில் மதிய உணவையும் பகிர்ந்து கொண்டார்.

பிரதமரின் திடீர் வருகை அப்பகுதி மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியதோடு, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவிக்கவும் பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles