
🔊To listen to this news in Tamil, Please select the text.
திரெங்கானு, செத்தியுவில் 8 பாஸ் கட்சி இளைஞர்கள் வெள்ளிக்கிழமையன்று Himpunan Pemuda Islam Terengganu (Himpit) பழங்காலத்து போருக்கான கவச உடைகளையும் வாள், ஈட்டி, கேடயம் போன்ற பாதுகாப்புச் சாதனங்களையும் கொண்டு சாலையில் அணிவகுத்துச் சென்றது பெரும் பீதியை ஏற்படுத்தி இருந்தது.
இது ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்ச்சி என்றும் யாரையும் அச்சுறுத்தும் நோக்கத்தோடு நடத்தப்படவில்லை என்றும் பாஸ் கட்சியினர் கூறிகின்றனர்.
வரும் மாநிலத் தேர்தலை ஒட்டி இது நடத்தப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகளுக்கு அச்சுறுத்தலை விடும் நோக்கில் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டதாக திரெங்கானு பக்காத்தான் ஹராப்பான் தலைவர் Raja Kamarul Bahrin (ராஜா கமாருல் பாஹ்ரின்) சாடியுள்ளார்.
அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கையைப் பல கட்சித் தலைவர்களும் சாடியதோடு, இது நாட்டில் அமைதியின்மையை உருவாக்கும் என்று எச்சரித்துள்ளனர்.



