
🔊To listen to this news in Tamil, Please select the text.
கடந்தாண்டு டிசம்பர் 16ஆம் தேதி நாட்டையே உலுக்கிய பத்தாங் காலி நிலச்சரிவில் 13 சிறார்கள் உட்பட 31 பேர் மரணமடைந்தனர். 61 பேர் உயிருடன் மீட்கப்- பட்டனர்.
நேற்று பத்தாங் காலியில் நடந்த Jelajah #KitaSelangor Penyayang programme எனும் நிகழ்ச்சியில், நிலச்சரிவில் மரணமடைந்தோரின் குடும்ப உறுப்பினர்களுக்குத் தலா 5,000 ரிங்கிட் கருணைத் தொகையை சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் Borhan Aman Shah (போர்ஹான் அமான் ஷா) மொத்தம் 155,000 ரிங்கிட்டை வழங்கினார்.
இந்த அசம்பாவிதத்தில் பாதிக்கப்பட்ட பினாங்கு, மலாக்காவினருக்கு அந்தந்த மாநிலங்களில் கருணைத் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.



