
🔊To listen to this news in Tamil, Please select the text.
எதிர்வரும் மாநிலத் தேர்தலில், ஜசெக போட்டியிட்டு வென்ற 11 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் கொண்டிருப்பதாக அதன் தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் சியூ ஃபூக் தெரிவித்தார்.
2013ஆம் ஆண்டிலிருந்து ஜசெக 11 தொகுதிகளைத் தற்காத்து வந்ததோடு, 15ஆவது பொதுத்தேர்தலில் அது அத்தொகுதிகளில் கணிசமான பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தாங்கள் பேராசை கொண்டவர்கள் இல்லை. கூடுதல் தொகுதிகளைக் கோரவுமில்லை என்றும் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றிருக்கும் பக்காத்தான் – தேசிய முன்னணி தலைமைத்துவம் இதில் நல்ல முடிவை எடுக்கும் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.



