
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஒப்பந்தத்துக்கு மாறாக தம்மை சட்டத் துறைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறி, அரசின் மீது Affandi Ali (அபாண்டி அலி) வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கில் சமரச உடன்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டு, இழப்பீடு வழங்க அரசு ஒப்புதல் கொடுத்ததோடு, இழப்பீட்டுத் தொகையை ரகசிய ஆவணமாக வைக்கப்பட்டிருப்பதால், அதனை வெளியிட இயலாது என்று சட்டத்துறை அமைச்சர் Azalina Osman (அஸாலினா ஓஸ்மான்) தெரிவித்திருந்தார்.
அது பற்றிக் குறிப்பிட்ட மூத்த அரசியல்வாதி லிம் கிட் சியாங், அபாண்டி அலி தமக்கு அரசு 2.23 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டுமென்று தமது வழக்கில் கூறியிருப்பதால், உண்மையில் அரசு எவ்வளவு தொகையை அவருக்கு வழங்கியுள்ளது என்பதை ஒளிவு மறைவில்லாமல் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.



