
🔊To listen to this news in Tamil, Please select the text.
வெளிநாடுகளில் இருந்து தொழிலாளர்- களைத் தருவித்துத் தரும் உரிமத்தைப் சட்ட விரோதமாகப் பயன்படுத்தி, சில வேலை வாய்ப்பு நிறுவனங்கள் மலேசிய தொழிலாளர்களை அதிகம் சம்பளம் என ஆசை வார்த்தை கூறி வெளிநாடுகளுக்கு அனுப்பிவருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இரு நிறவனங்களின் ஏஜெண்டுகளைப் போலீசார் கைது செய்திருப்பதாக புக்கிட் அமான் சிஐடி இயக்குநர் அப்துல் ஜாலில் ஹசான் தெரிவித்தார். அவர்கள் மீது 2007ஆம் ஆண்டு ஆள்கடத்தல் சட்டத்தின் வழி குற்றம் சாட்டப்படும் என்று தெரிவித்தார்.
நூற்றுக் கணக்கான மலேசியர்கள் தாய்லாந்து, மியன்மார், கம்போடியா, லாவோஸ் போன்ற நாடுகளுக்கு 2,000 டாலர் அல்லது 8 800 ரிங்கிட் சம்பளம் தருவதாகப் பொய் சொல்லி, அனுப்பப்பட்டு, சட்ட விரோதக் காரியங்களுக்குப் பயன்படுத்துவதாகப் பல புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
எனவே, அதிகமான சம்பளம் என்ற ஆசை வார்த்தைக்கு மயங்காமல், மலேசியர்கள் விழிப்பாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.



