
🔊To listen to this news in Tamil, Please select the text.
நட்டின் சில பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கோடிக் கணக்கான பணம் பற்றிய ‘பண்டோரா பேப்பர்ஸ்’ எனப்படும் நடவடிக்கை மீதான விசாரணை தொடர்வதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாரிட் சூலோங் நாடாளுமன்ற உறுப்பினர் Noraini Ahmad (நொரைய்னி அமாட்) எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அன்வார், அந்த விசாரணையானது தேசிய நிதித்துறை குற்றவியல் மையம், பேங்க் நெகாரா, ஊழல் தடுப்பு ஆணையம், உள்நாட்டு வருமான வரி வாரியம் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு நடந்து வருவதாகவும் அதன் மேம்பாட்டினை அவ்வப்போது தாம் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
அது சம்பந்தமாக விசாரணைக்கு அழைக்கப்பட்ட சிலர் அமலாக்கத் துறைக்குத் தங்களின் வாக்குமூலத்தை அளித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விசாரணையின் முடிவைப் பொறுத்து வெளிநாட்டில் கோடிக் கணக்கான பணத்தைப் பதுக்கி வைத்திருப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.



