
🔊To listen to this news in Tamil, Please select the text.
பூமிபுத்ரா நிறுவனங்களுக்கு உதவுவதாகக் கூறி அவற்றிடமிருந்து கோடிக் கணக்கில் லஞ்சம் பெற்று, கட்சிகளுக்குப் பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பூமிபுத்ரா எனும் போர்வையில் அரசியல் தலைவர்கள் கோடிக் கணக்கான அரசின் பணத்தைச் சுரண்டும் போக்கை அனுமதிக்க முடியாது என்றும் அம்மாதிரியான நடவடிக்கையில் ஈடுபடுவோர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.
நாட்டின் அரசியல் தலைவர்கள் பலர் உலகிலேயே அதிகமான பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதாகவும், உள்நாட்டில் வரி செலுத்துவதைத் தவிர்க்க இம்மாதிரியான நடவடிக்கையை ‘பண்டோரா பேப்பர்ஸ்’ விசாரணை வெளிப்படுத்தியதை அடுத்து அது சம்பந்தமான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
விசாரணையின் முடிவில் குற்றம் புரிந்தோர் யாராக இருந்தாலும், தண்டனை பெறுவது உறுதி என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.



