33.5 C
Kuala Lumpur
Saturday, July 4, 2026

Vetri

தகுதிக்கேற்ற வேலை இல்லை: தொழில் நிபுணர்கள் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்வு

🔥 Views : 15
👁 Reading Now : 21

🔊To listen to this news in Tamil, Please select the text.

தகுதிக்கேற்ற வேலை கிடைக்காமை, பதவி உயர்வு இல்லாமை, பிரபலமானவர்களின் உதவியோடு பதவி உயர்வைப் பெறுவது, குறைந்த சம்பளம், வேலையிடத்தில் பாகுபாடு போன்றவற்றினால்தான் மலேசிய தொழில் சார்ந்த நிபுணர்கள் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்வதாக மனிதவள துணையமைச்சர் Mustapha Sakmud (முஸ்தாப்பா சாக்முட்) தெரிவித்தார்.
தொழில் நிபுணர்கள் பெரும்பாலும் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற நாடுகளுக்கு வேலைக்காகச் சென்று, அங்கேயே தங்கி விடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நமது நாட்டில் தொழில் ரீதியான நிபுணர்களின் தகுதிக்கேற்ற சம்பளம் கடந்த 30 ஆண்டுகளாக அதிகரிக்கப்படவில்லை என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
வெளிநாடுகளுக்குச் சென்ற தொழில் நிபுணர்களை நாட்டுக்குக் கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் முஸ்தாப்பா தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles