
🔊To listen to this news in Tamil, Please select the text.
இவ்வாண்டு நடைபெறவிருக்கும் 6 மாநிலத் தேர்தல்களில் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தானின் தலை தப்புமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
பெரிக்காத்தானின் குறுகிய கால ஆட்சியில் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம், பூமிபுத்ரா குத்தகையாளர்களுக்கான ஜானா விபாவா திட்டம், கோவிட்டுக்கான தடுப்பூசி கொள்முதல் ஆகியவற்றில் கோடிக் கணக்கான அரசின் நிதி கையாடல் செய்யப்பட்டதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
அதனையொட்டி பெர்சத்துவின் 30 கோடி வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு, அது தேர்தலுக்கு பணம் செலவழிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அதன் தகவல் தொடர்புத் தலைவர் வான் சைஃபுல் 7 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகவும், சிகாம்புட் பெர்சத்து துணைத் தலைவர் அடாம் ரட்லான் 5 லட்சம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகவும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெர்சத்தவின் கை கட்டப்பட்டிருக்கும் நிலையில் மாநிலத் தேர்தல்களில் பொதுத்தேர்தல் போன்று பரப்புரை நிகழ்த்தி, வாக்காளர்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, வாக்கு பெற முடியாத நிலைக்குத் அது தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் அது பக்காத்தான் கூட்டணியை எதிர்த்து வெற்றி கொள்வது இயலாத காரியம் என்றும் ஆரூடம் கூறப்படுகிறது.



