
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஜானா விபாவா ஊக்குவிப்புத் திட்டத்தில் MIE Infrastructure and Energy Sdn Bhd கட்டுமான மற்றும் எனர்ஜி நிறுவனத்திற்கு சாலை நிர்மாணிப்புத் திட்டத்தைப் பெற்றுத் தர 5 லட்சம் ரிங்கிட்டையும் மொத்த குத்தகைத் திட்டமான 47.8 மில்லியனில் இருந்து 3.5லிருந்து 7 விழுக்காடு லஞ்சம் பெற்றதாக சிகாம்புட் பெர்சத்து துணைத் தலைவர் Adam Radlan Adam Muhammad (அடாம் ரட்லான் அடாம் முகமட்- 42) மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
5 லட்சம் ரிங்கிட்டை அவர் நிறுவனத் தலைவர் Juso Mamaad (ஜூசோ மாமாட்) டிடமிருந்து பெற்றப் பணத்தை 2021 நவம்பர் 26ஆம் தேதி புக்கிட் துங்கு சிஐஎம்பி வங்கிக் கணக்கில் செலுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
அக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், எம்ஏசிசி சட்டம் பிரிவு 24(1)இன் கீழ் 20 ஆண்டு சிறையும் 10,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படும்.
அவர் 120,000 ரிங்கிட் பிணைத் தொகை, இரு நபர் உத்தரவாதத்தின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டார். வழக்கின் முதல் வாசிப்பு மார்ச் 23ஆம் தேதி நடைபெறும்.



