33.5 C
Kuala Lumpur
Saturday, July 4, 2026

Vetri

எதிர்க்கட்சிகளைக் குத்திக் காட்டுவதையும் தலைவர்களைக் கைது செய்வதிலும் மிகுந்த கவனம் தேவை

🔥 Views : 10
👁 Reading Now : 47

🔊To listen to this news in Tamil, Please select the text.

பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினை ஊழல்வாதி என்று அடிக்கடி சாடியும் ஜானா விபாவா ஊக்குவிப்புத் திட்டத்தில் நிதி முறைகேடு செய்திருப்பதாகவும் பெர்சத்துவின் தகவல் பிரிவுத் தலைவர வான் சைஃபுல் வான் ஜானை கைது செய்து, குற்றம் சாட்டியதில் பிரதமர் அன்வார் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டுமென பாசிர் கூடாங் எம்பி ஹசான் கரிம் வலியுறுத்தியுள்ளார்.
முஹிடினையும் அவரின் ஆதரவாளர்களையும் குற்றம் சொல்வதில் அன்வார் குறியாக இருப்பதை எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்கும் செயலென மக்கள் கருத இடம் கொடுக்கக் கூடாதெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
அன்வார் தமக்கிருக்கும் அதிகாரத்தை வைத்து எதிர்வரும் 6 மாநிலத் தேர்தல்களில் முஹிடினை கவிழ்க்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறார் என்ற மக்களின் எண்ணத்திற்கு இடம் கொடுக்கக் கூடாதெனவும் அவர் அறிவுறுத்தினார். அதன் பின்விளைவு கடுமையாக இருப்பதை பிரதமர் மனதில் வைக்க வேண்டும்.
‘அதிகாரம் ஊழலுக்கு வித்திடும், வானளாவிய அதிகாரம் கண்மூடித் தனமான ஊழலுக்கு ஊன்றுகோலாக மாறும்’ என்றும் அன்வார் தம்மையே நிதியமைச்சராக நியமித்தது நல்ல முன்னுதாரணம் அல்லவென்றும் அவர் நாடாளுமன்றத்தில் பேரரசரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும்போது குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles