
🔊To listen to this news in Tamil, Please select the text.
இந்தோனேசிய வீட்டுப் பணிப் பெண்களைத் தருவிக்கும் கட்டணமான 12,000 ரிங்கிட்டை 9,000 ஆகக் குறைக்க இரு நாடுகளும் கூடி விவாதிக்கவிருப்பதாக மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் தெரிவித்தார்.
12,000 ரிங்கிட் கட்டணத்தில் பணிப் பெண்களைத் தடுத்து வைக்கும் (குவாரன்டைன்) கட்டணமும் அடங்கும் என்றும் அதனைத் தவிர்த்தால், பணிப்பெண் சேவையை நாடுவோர் அதிக சுமையை எதிர்கொள்ள வேண்டியிருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்குமிடையே நடக்கும் பேச்சுவார்த்தையில், வேலை வழங்கும் ஏஜென்சிகள், தருவிக்கும் நடைமுறை, தருவிக்கும் டிஜிட்டல் நடைமுறை போன்றவையும் விவாதிக்கப்படும்.
தற்போது நாட்டில் 399,827 இந்தோனேசியர்கள் உற்பத்தி, கட்டுமானம், சேவை, விவசாயம், சுரங்கத் துறைகளில் வேலை செய்வதோடு நாட்டிலிருக்கும் 63,323 பணிப் பெண்களில் பெரும்பாலோர் இந்தோனேசியப் பெண்கள் என்றும் சிவகுமார் தெரிவித்தார்.



