33.5 C
Kuala Lumpur
Saturday, July 4, 2026

Vetri

லோரி ஓட்டுநர்களுக்குப் பாதுகாப்புப் பயிற்சிகளை வழங்க வேண்டும்

🔥 Views : 10
👁 Reading Now : 20

🔊To listen to this news in Tamil, Please select the text.

நாட்டில் கனரக வாகனங்கள் விபத்தில் சிக்கி ஓட்டுநர்கள், உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மரணமடைவது அதிகரித்து வருவது கவலைக்குரியதாகி வருகிறது.
அத்தகவலைக் கூறிய தீபகற்ப மலேசியா போக்குவரத்து கட்டமைப்புக் கழகத்தின்(Pulse) தலைவர் புவனேஸ்வரன் சுப்ரமணியம், அம்மாதிரியான விபத்துகளில் ஏற்படும் மரண சம்பவங்களைத் தடுக்கும் விழிப்புணர்வு பயிற்சிக் கருத்தரங்குகளை நடத்த அரசு முன்வர வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
தற்போது இம்மாதிரியான பயிற்சி வகுப்புகளை நிலப் போக்குவரத்து தனியார் ஏஜென்ஸியான அபாட் நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார். ஆனால், அந்தப் பயிற்சி வகுப்புகள் ஓட்டுநர்களுக்கு வழங்கப்படாமல், லோரி உரிமையாளர்களுக்கு வழங்கப்படுவதாக புவனேஸ்வரன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles