
🔊To listen to this news in Tamil, Please select the text.
கோலாலம்பூர், பண்டாயாராயா எல்ஆர்டி ரயில் நிலைய தணடவாளப் பாதிப்பினால் அந்த நிலைய சேவை தடைபட்டு பயணிகளுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த நிலையத்திற்கு அருகில் முன் அனுமதி இன்றி 44 மாடி ஹோட்டல் ஒன்று கட்டப்படுவதால், ரயில் தண்டவாளத் தூண்களும் தண்டவாளக் கட்டுமானமும் கடுமையாக சேதமுற்றுள்ளன.
அதனைச் சீரமைக்க 7 மாத காலம் ஆகும் என்று தெரிவித்த போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ ஃபூக், இடைப்பட்ட காலத்தில் பயணிகளுக்கு உதவ பேருந்து சேவை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.



