
🔊To listen to this news in Tamil, Please select the text.
கிழக்குக் கரைக்கான விரைவு ரயில் திட்டத்தின் முதன்மை குத்தகையாளரான சீனாவின் சிசிசிசி நிறுவனத்தோடு இரு முறை நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையின் முடிவில், அத்திடத்திற்கான மொத்த செலவில் 1,100 கோடி ரிங்கிட் குறைக்கப்பட்டதாகப் போக்குவரத்து அமைச்சர் Anthony Loke Siew Fook (அந்தோணி லோக் சியூ ஃபூக்) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
665 கிலோ மீட்டர் தூரத்திலான அந்த ரயில் திட்டம் கிளந்தான் துஞ்சோங், கோத்தா பாருவில் தொடங்கி பகாங், சிலாங்கூர் மாநிலங்களின் வழியாக போர்ட் கிள்ளானை வந்தடையும். அதன் மொத்த செலவினம் 5,027 கோடி ரிங்கிட் என திட்டமிடப்பட்டுள்ளது.
அத்திட்டத்தில் கோத்தா பாருவிலிருந்து டுங்குன் வழித் தடத்திலும் அதன் பின்னர் தெமர்லோவில் இருந்து போர்ட் கிள்ளான் வழித் தடத்திலும் மாற்றங்களைச் செய்த பின்னர், மேற்கண்ட தொகையை மிச்சப்படுத்த முடிந்ததாக அந்தோணி லோக் தெரிவித்தார்.



