
🔊To listen to this news in Tamil, Please select the text.
புலம் பெயர்ந்த அந்நியர்கள் தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 17,703 பேரில் கடந்தாண்டு 7 சிறார் உட்பட 150 பேர் மரணமடைந்த விவகாரம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது,
இது சம்பந்தமாக ஆழமான விசாரணை வேண்டுமென மனித உரிமை அமைப்பான Human Rights Watch தலைவர் Phil Robertson (பில் ரோபர்ட்சன்) வலியுறுத்தியுள்ளார்.
தடுப்பு மையங்கள் போதுமான சுகாதாரத்தோடு இல்லாமலும், தகுந்த வசதியில்லாமலும் இருப்பதாகப் பல புகார்களைத் தாங்கள் பெற்றிருப்பதால், அது பற்றியும் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டிற்கு ஆவணமன்ற அந்நியர்கள் ஆயிரக் கணக்கானோர் படையெடுத்து வருவதோடு ஒரு லட்சம் ரோஹிங்யா அகதிகளும் இங்கு தடுத்து வைக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.
தடுப்பு முகாம்கள் பெரும்பாலும் நெரிசலாகவும், சுகாதாரமற்றதாகவும், போதுமான உணவு, குடிநீர், சிகிச்சை வசதி இல்லாமலும் இருப்பதாக பல்வேறு புகார்களும் சொல்லப்படுகின்றன. அதற்கு அரசு தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டுமென பில் ரோபர்ட்சன் கேட்டுக் கொண்டார்.



