
🔊To listen to this news in Tamil, Please select the text.
Jana Wibawa (ஜானா விபாவா) பூமிபுத்ரா பொருளாதார ஊக்குவிப்புத் திட்ட ஊழலில் முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினை சம்பந்தப்படுத்த, Wan Saiful Wan Jan (வான் சைஃபுல் வான் ஜானுக்கு) 1 கோடி ரிங்கிட்டை வழங்க ஊழல் தடுப்பு ஆணையம் முயன்றதாகக் குற்றம் சாட்டியிருந்த நபர் இறுதியில் கைது செய்யப்பட்டார்.
பெர்சத்துவின் முன்னாள் தகவல் பிரிவுத் தலைவர் வான் சைஃபுல்லுக்கு தனிப்பட்ட ஆய்வாளர் எனக் கூறிக் கொள்ளும் அந்த நபர், எம்ஏசிசி தலைமையகத்தில் சரண் அடைந்த பின்னர், நேற்று மதியம் 3.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
எம்ஏசிசிக்கு எதிராக அந்த நபர் வெளியிட்ட வீடியோ பதிவுக்காக மன்னிப்பு கேட்டிருந்தாலும், அவர் ஏற்படுத்திய களங்கத்திற்கும் அவப்பெயருக்கும் அவர் மீது குற்றம் சாட்டப்படும் என எம்ஏசிசி ஆணையர் Azam Baki) அஸாம் பாக்கி தெரிவித்தார்.



