
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஜானா விபாவா பூமிபுத்ரா குத்தகையாளர்களின் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தில் சிகாம்புட் பெர்சத்து துணைத் தலைவரும் தொழிலதிபருமான Adam Radlan Adam Muhammad (அடம் ரட்லான் அடாம் முகமட்) மீது இதற்கு முன்னர், 4 ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
அவர் மீது கூடுதலாக இன்னும் ஒரு வழக்கு அடுத்த வாரத்தில் சுமத்தப்படலாம் என ஊழல் தடுப்பு ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னர், அவர் மீது ஷா ஆலம், கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றங்களில் 4 வழக்குகள் சுமத்தப்பட்டிருந்தன.
நேற்று முன்தினம், 4.1 மில்லியன் ரிங்கிட் பெறுமான இரு வழக்குகளில் அவர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார். செவ்வாய்க்கிழமை 47.8 மில்லியன் பெறுமான சாலை கட்டுமானத் திட்டத்தில் 5 லட்சம் ரிங்கிட்டை லஞ்சமாகப் பெற்ற வழக்கிலும் அவர் விசாரணை கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.



