
🔊To listen to this news in Tamil, Please select the text.
பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என். கோபாலகிருஷ்ணன், விமானி தம்பதியருக்கு இழப்பீடாக 150,000 ரிங்கிட்டை செலுத்த வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
2019 ஜூன் 4ஆம் தேதி, எஸ். செல்வகுமார் – ஆர்.இந்திராணி தம்பதியரை இழிவு படுத்தி, நிந்தனையான செய்தியையும் புகைப் படங்களையும் வெளியிட்டு சிறுமைப்படுத்திய கோபாலகிருஷ்ணன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
அந்த நிந்தனையான செய்தியை வேண்டுமென்றே, காரணமின்றி கோபால- கிருஷ்ணன் வாட்ஸப் செயலியில் வெளியிட்டது குற்றம் என அறிவித்த நீதிமன்ற ஆணையர் ராஜா அமாட் மொஹ்ஸானுடின், மேற்கண்ட இழப்பீட்டை சம்பந்தப்பட்ட செல்வகுமார் – இந்திராணி தம்பதியருக்குச் செலுத்த வேண்டுமென உத்தரவிட்டார்.



