
🔊To listen to this news in Tamil, Please select the text.
நீலாயில் இந்தோனேசிய கள்ளக் குடியேறிகளின் சட்டவிரோத குடியிருப்பில் கைது செய்யப்பட்ட 67 பேரில் 61 பேர் நேற்று சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மாநில குடிநுழைவு இயக்குநர் Kennith Tan Aik Kiang (கென்னத் டான் ஆய்க் கியாங்) தெரிவித்தார்.
எஞ்சிய 5 பேர் பிப்ரவரி 16ஆம் தேதி குடிநுழைவு சட்ட மீறலுக்காக விசாரிக்கப்பட்டு 8 லிருந்து 10 மாதம் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டனர்.
கள்ளக் குடியேறிகளுக்கு நிலத்தைக் கொடுத்து குடியிருப்பை நிர்மாணிக்க அனுமதியளித்த நில உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
நீலாயில் முதன்மை சாலைக்கு 1.2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டிருந்த குடியிருப்பை பிப்ரவரி 1ஆம் தேதி காலை 1.30 மணிக்கு முற்றுகையிட்ட போலீஸார், 2 மாத குழந்தை உட்பட 72 வயது வரைக்குமான 67 பேரைக் கைது செய்தனர்.



