
🔊To listen to this news in Tamil, Please select the text.
மக்களவையில் அறிவிக்கப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இந்திய சமூகத்திற்கு எதுவுமே ஒதுக்கப்படவில்லை என்ற அதிருப்தி நிலவுகிறது.
இது இந்தியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதோடு ஒற்றுமை அரசாங்கத்தில் இருக்கும் பிகேஆர், ஜசெக மக்கள் பிரதிநிதிகள் இதற்குப் பதில் சொல்ல வேண்டுமென அறைகூவலும் விடுக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் நஜிப் ரசாக், துன் மகாதீர், முஹிடின் யாசின், இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஆகியோரின் வரவு செலவுத் திட்டங்களில் இந்தியர்களுக்குக் கணிசமான ஒதுக்கீடு இருந்த நிலையில், 80 விழுக்காடு இந்தியர்களின் ஆதரவைப் பெற்றிருக்கும் அன்வார் இந்தியர்களுக்கு என்ன கொடுத்தார் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
முந்தைய ஆட்சியில் தமிழ்ப் பள்ளிகள், இந்திய தொழில் முனைவோர், மித்ரா, ஏய்ம்ஸ் பல்கலைக்கழகம் போன்றவற்றிற்கு வெவ்வேறு ஒதுக்கீடுகள் அளிக்கப்பட்ட நிலையில், அன்வார் அதற்கெல்லாம் கைவிரித்துள்ளார் என்றே விமர்சிக்கப்படுகிறது.



