
🔊To listen to this news in Tamil, Please select the text.
விரைவில் நடைபெறவிருக்கும் அம்னோவின் உதவித் தலைவர் போட்டியில் பலர் போட்டியிடும் வாய்ப்பு இருக்கும் என் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தற்போது உதவித் தலைவர்களாக இருக்கும் Ismail Sabri Yaakob (இஸ்மாயில் சப்ரி யாக்கோப்) போட்டியிடுவது பற்றி வாய் திறக்காத நிலையில் Khaled Nordin (காலிட் நோர்டினும்) Mahdzir Khalid, (மாட்ஸிர் காலிட்)டும் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து உச்சமன்ற உறுப்பினர் Azalina Osman (அஸாலினா ஒஸ்மான்), இளைஞர் பிரிவு தலைவர் Azraf Wajdi Dusuki (அஷ்ராஃப் வாஜ்டி டுசுக்கி), ஜொகூர் முன்னாள் அம்னோ தலைவர் Hasni Mohd (ஹஸ்னி முகமட்), உச்சமன்ற உறுப்பினர் Shamsul Anwar (ஷம்சுல் அனுவார் நசாரா)வும் போட்டியிடக் கூடும் என ஆரூடம் கூறப்படுகிறது.



