
🔊To listen to this news in Tamil, Please select the text.
பணியில் இருக்கும் நீதிபதியின் மீது விசாரணை நடத்துவதற்கு கூட்டரசு நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரத் தவறியதால் தற்போதைய மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டத்தோ முகமட் நஸ்லான் கஸாலியின் மீது ஊழல் தடுப்பு ஆணையம் தன்னிச்சையாக விசாரணை நடத்த அனுமதியில்லை என கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நஸ்லான் மீது எம்ஏசிசி நடத்திய விசாரணை சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டுமென்று மூன்று வழக்கறிஞர்களின் மனுவை விசாரித்த தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான 9 பேர் அடங்கிய நீதிபதிகளின் அமர்வு, அந்த வழக்கை ஏற்று நீதிபதி நஸ்லான் மீதான விசாரணையைத் தள்ளுபடி செய்தது.
இதனிடையே , எம் ஏசிசியின் விசாரணை அறிக்கை தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுனிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக சட்டத்துறை அமைச்சர் அஸாலினா ஒஸ்மான் தெரிவித்திருந்தார்.
எஸ்ஆர்சி வழக்கில் நஜிப் ரசாக்கிற்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும் 21 கோடி ரிங்கிட் அபராதத்தையும் விதித்த நீதிபதி நஸ்லானின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட ஒரு மில்லியன் ரிங்கிட் ட்டவிரோதப் பணம் என புகார் தெரிவித்ததன் அடிப்படையில், எம்ஏசிசி அவர் மீது தன்னிச்சையான விசாரணையை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.



