
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஜோகூர், மெர்சிங்கில், காணாமல் போனதாக நம்பப்படும் பெரோடுவா மைவி ஓட்டுநர் , வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டிருப்பதாக ஐயுறப்படுகிறது.
Jalan Nitar Utama பகுதியில் , 23 வயதான அந்த பெண் ஓட்டுநர் காருக்குள் சிக்கியிருக்கலாமென நம்பப்படுவதாக தீயணைப்பு மீட்பு படையின் உதவி மேற்பார்வையாளர் Abdul Muiz Mukhtar தெரிவித்தார்.
அந்த பெண் காணாமல்போன பகுதியிலும் அதன் சுற்றுப் பகுதியிலும் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், அப்பகுதியில் 1. 2 மீட்டர் உயரத்திற்கு வெள்ளம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
