28.7 C
Kuala Lumpur
Wednesday, July 22, 2026

Vetri

டாக்சியோட்டியிடம் கொள்ளையடித்த குண்டர் கும்பலைச் சேர்ந்த இருவர் கைது

🔥 Views : 19
👁 Reading Now : 43

🔊To listen to this news in Tamil, Please select the text.

வாடகைக் காரில் பயணிகள் போல் வேடமிட்டு பயணித்த கேங் 08 குண்டர் கும்பலைச் சேர்ந்த இருவர் டாக்சியோட்டியை அச்சுறுத்திக் கொள்ளையடித்த 4 மணி நேரத்திற்குப் பின்னர் கைது செய்யப்பட்டனர்.
கேலாங் பாத்தாவிலிருந்து ஜொகூர் பெங்கெராங்கிற்கு சென்ற டாக்சி ஜாலான் தொக்கோங் தாய் சான் கோங் எனும் இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, அந்தக் கொள்ளைச் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.
மதியம் 3.05 மணியளவில் நடந்த அந்தச் சம்பவத்தில் டாக்சியோட்டியிடம் கத்தியைக் காட்டி, மிரட்டி இரு கைப்பேசிகள், ரொக்கம் 400 ரிங்கிட், ஒரு கைக் கடிகாரம் போன்றவற்றை அவர்கள் கொள்ளையடித்த பின்னர், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
புகார் கிடைத்ததை அடுத்து போலீசாரின் துரித நடவடிக்கையில், அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பரிசோதனையில் கேங் 08 குண்டர் கும்பலின் சின்னத்தை உடலில் பச்சை குத்திக் கொண்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles