
🔊To listen to this news in Tamil, Please select the text.
படுக்கை அறையில் தனது மனைவியின் இடது கண்ணில் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர் ஒருவர் நேற்று காலையில் கைது செய்யப்பட்டார்.
போலீஸ்காரரரின் மைத்தனர் அளித்த புகாரை அடுத்து, சிம்பாங் அம்பாட், கம்போங் பெண்டாங் பாருவில் உள்ள வீட்டின் அறைக் கதவை உடைத்து உள்ளே நழைந்த போலீஸார், படுக்கையில் மனைவியின் உடலோடு படுத்திருந்த அந்தப் போலீஸ்காரரைக் கைது செய்தனர்.
அவரின் துப்பாக்கியைக் கைபற்றியதோடு சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக துவாங்கு ஃபவுஸியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குற்றவியல் சட்டம் பிரிவு 301இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுவதாக கங்கார் போலீஸ் தலைவர் Yusharifuddin Yusop (யுஷரிஃபுடின் யூசோப்) தெரிவித்தார்.



