25.3 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

நஜிப்பை விடுவித்த நீதிபதியே ரோஸ்மாவை குற்றவாளி என்று தீர்ப்பளித்தார்

🔥 Views : 4
👁 Reading Now : 21

🔊To listen to this news in Tamil, Please select the text.

1எம்டிபி சம்பந்தமான தேசிய தணிக்கையாளரின் அறிக்கையில் தம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கத்தோடு திருத்தம் செய்த வழக்கில், நஜிப் ரசாக்கும் அவருக்கு உடந்தையாக இருந்த தலைமை செயல்முறை அதிகாரி அருள் கந்தா கந்தசாமியும் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டனர்.
நீதிபதி ஸைனி மஸ்லான் அளித்த நஜிப்பிற்கு சாதகமான தீர்ப்பை ஊடகவியலாளர்கள் கடுமையாக விமர்சித்து நீதி திசை மாறுகிறதா எனும் கேள்வியை எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில், இந்தத் தீர்ப்பானது இன்னும் பல சாதகமான தீர்ப்புகளுக்கு வழி வகுக்கும் என ரோஸ்மா சூசகமாகக் குறிப்பிட்டிருந்தார்.
தீர்ப்பினை எதிர்த்து விமர்சித்தவர்களைச் சாடிய நஜிப்பின் புதல்வி Nooryana (நூர்யானா நஜிப்), தமது தகப்பனார் நஜிப்பை வழக்கிலிருந்து விடுவித்த அதே நீதிபதியே தமது தாயாரின் சூரிய சக்தி குத்தகைத் திட்ட லஞ்ச வழக்கில் அவருக்குத் தண்டனை விதித்திருப்பதாகத் தெரிவித்தார்.
தண்டனையை வரவேற்கும் விமர்சகர்கள், வழக்கிலிருந்து ஒருவரை விடுவிக்கும்போது ஆவேசமாக விமர்சிப்பது நியாயமற்ற செயலென கடிந்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles