25.3 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

மேல்மட்ட போலீஸ் அதிகாரியின் வங்கிக் கணக்கு மீதான விசாரணை என்னவானது?

🔥 Views : 3
👁 Reading Now : 22

🔊To listen to this news in Tamil, Please select the text.

கூட்டரசு கிரிமினல் புலனாய்வு இலாகாவின் முன்னாள் தலைவர் Wan Ahmad Najmuddin Mohd (வான் அமாட் நஜ்முடின் முகமட்) 2018 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் 5 மாநில வங்கிகளில் மொத்தம் 320,000 ஆஸ்திரேலிய டாலரை (10.3 மில்லியன் ரிங்கிட்டை)இருப்பாக வைத்திருந்ததாக ஆஸ்திரேலிய போலீஸார் உறுதிப்படுத்தினர்.
அது சம்பந்தமாகப் பலமான அறைகூவல் விடுத்த பின்னர், ஊழல் தடுப்பு ஆணையமும் போலீஸாரும் விசாரணை நடத்தியதாக கெப்போங் நாடாளுமன்ற உருப்பினர் லிம் லிப் எங் தெரிவித்தார்.
ஆண்டுகள் பல ஆகியிருந்தாலும் அந்த விசாரணையின் முடிவு இன்னமும் மர்மமாகவே வைக்கப்பட்டுள்ளது. போலீஸ் துறையின் மேல்மட்ட அதிகாரிக்கு அவ்வளவு பணம் எப்படி வந்தது என்பது சந்தேகத்துக்குரியதாக இருப்பதால், போலீஸ் தலைவர் அக்ரில் சானி விசாரணையின் முடிவை பொதுவில் அறிவிக்க வேண்டுமென லிம் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles