26.4 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

60 கோடி பெறுமான வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் ஜூனில் தொடங்கும்

🔥 Views : 3
👁 Reading Now : 37

🔊To listen to this news in Tamil, Please select the text.

ஜொகூர் மாநிலத்தில் 60 கோடி பெறுமான வெள்ளத் தடுப்புத் திட்டங்கள், டெண்டர் நடவடிக்கை முடிந்த பின்னர், ஜூன் மாதத்தில் தொடங்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் அத்திட்டங்களில் பண விரயம் ஏற்படும் எனும் சந்தேகத்தின் பேரில் அவை நிறுத்தப்பட்டதாகவும், அவற்றைக் காலதாமதம் இன்றி தொடங்குவதற்கு தற்போது அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், ஜொகூர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் உணவுப் பிரச்சினைகளைக் களைய 1 கோடி ரிங்கிட்டும் பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவி அளிக்க 5 கோடி ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஜொகூரின் வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள அவசரகாலத்தைப் பிரகடனப்படுத்தும் தேவை எழவில்லை என்று வெள்ளப் பாதிப்பை பார்வையிட்டபோது அன்வார் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles