
🔊To listen to this news in Tamil, Please select the text.
பல்கலைக்கழகங்களில் அரசியல் கட்சிகளின் கிளைகளை உருவாக்க அனுமதி வழங்கப்படும் என உயர்கல்வி அமைச்சர் Khalid Nordin (காலிட் நோர்டின்) மக்களவையில் குறிப்பிட்டது பெரும் கண்டனத்துக்கு உள்ளானது.
அத்திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கும் Angkatan Mahasiswa University Malaya எனும் மாணவர் அமைப்பு அது மாணவர்களிடையே மோதலை உருவாக்கி கல்விக் கூடங்களில் அமைதி இன்மையை உருவாக்கும் என எச்சரித்துள்ளது.
வெவ்வேறு சிந்தாந்தக் கருத்துகள் கொண்ட மாணவர்கள் ஒருவரோடு ஒருவர் மோதி, சர்ச்சையில் சிக்கி கல்வியின் மீதான நாட்டத்தைக் கெடுத்துக் கொள்வதோடு, கட்சி சார்ந்த வெறுப்பையும், துவேஷத்தையும் ஊக்குவிப்பர் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
மாணவர்களைக் கவர கட்சிகள் பணத்தைக் கொடுத்து தங்களின் ஆதரவைப் பெருக்கிக் கொள்வதோடு மாணவர்களிடையே ஒத்துழை- யாமையை உருவாக்கி சீர்குலைக்க வைக்கும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.



