31.8 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

மேல்மட்டத் தலைமைப் பதவி: ஆர்ஓஎஸ்ஸின் கடிதத்தைப் பொதுவில் காட்டுக!

🔥 Views : 2
👁 Reading Now : 31

🔊To listen to this news in Tamil, Please select the text.

அம்னோவின் மேல்மட்ட இரு பதவிகளுக்குப் போட்டியில்லை என்ற தீர்மானத்தை சங்கங்களின் பதிவதிகாரி (ஆர் ஓஎஸ்) அங்கீகரித்துள்ளதாக டத்தோஸ்ரீ அமாட் ஸாஹிட் ஹமிடி கூறியிருப்பது நம்பத் தகுந்ததாக இல்லையென்று உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்ஓஎஸ் அனுப்பியிருக்கும் கடிதம் சம்பந்தமாக இருவேறு தகவல்கள் வெளியாகி இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அக்கடிதத்தை அம்னோ தலைமைத்துவம் வெளிப்படையாகக் காட்ட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
அந்தத் தீர்மானம் சட்டத்துக்குப் புறம்பாக தாக்கல் செய்யப்பட்டு பேராளர்களின் ஒப்புதலைப் பெற்றதாகக் கூறப்பட்டாலும் அதற்கு சங்கங்களின் பதிவதிகாரி அங்கீகாரத்தை வழங்கியிருக்கும் சாத்தியம் இல்லையென்றும் இஸ்மாயில் சப்ரி சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles