
🔊To listen to this news in Tamil, Please select the text.
அம்னோ இளைஞர், மகளிர், புத்ரி அம்னோ தேர்தல்களில் தமது நெருக்கமான ஆதரவாளர்கள் வெற்றி பெற்றதன் வழி அதன் தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடியின் பதவி உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஸாஹிட்டின் ஆதரவாளரான Noraini Ahmad (நோராயினி அமாட்) மகளிர் பிரிவுத் தலைவியாகவும், Muhamad Akmal Saleh (முகமட் அக்மால் சாலே) இளைஞர் பிரிவுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தேர்தல் பிரிவுத் தலைவர் Shahrir Abdul Samad (டான்ஸ்ரீ ஷாஹ்ரிர் அப்துல் சமாட்) அறிவித்தார்.
புத்ரி அம்னோ தலைவியாக Nurul Amal Mohd Fauzi (நூருல் அமால் முகமட் ஃபவுஸி)யும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், கோத்தா கினபாலு, தானா மேரா, கோலா கெடா மகளிர் மற்றும் பத்து காவான் தேர்தல்களில் முறைகேடு நடந்துள்ள காரணமாக ரத்து செய்யப்- பட்டிருப்பதாக ஷாரிர் தெரிவித்தார்.
மார்ச் 18ஆம் தேதி நடைபெறவிருக்கும் அம்னோ தேர்தலில் அதன் 164,000 உறுப்பினர்கள் 3 உதவித் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பர்.



