
🔊To listen to this news in Tamil, Please select the text.
பூமிபுத்ரா பொருளாதார ஊக்குவிப்புத் திட்டமான ஜானா விபாவா சம்பந்தப்பட்ட விசாரணைகளை ரத்து செய்வதற்காக 4 லட்சம் ரிங்கிட்டை கையூட்டாகப் பெற்ற 54 வயதான டத்தோ ரோய் என்றழைக்கப்படும் வர்த்தகரான Mohd Hussein Mohd Nasir (முகமட் ஹுசேய்ன் முகமட் நாசிர்) என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
போலீஸார் அவரைத் தேடிவந்த நிலையில், தாமாக முன்வந்து சரணடைந்தபோது கைது செய்யப்பட்டு, 3 நாள் தடுத்து வைக்கப்பட்டு, விசாரிக்கப்படுகிறார்.
இதற்கு முன்னர் அவரின் உதவியாளர் மற்றும் தனிப்பட்ட நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



