29.1 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

அரசாங்கத் தலைவர்கள் சம்பந்தப்பட்ட கோப்புகள் இருப்பதாகக் கூறுவது பொறுப்பற்ற செயல்

🔥 Views : 4
👁 Reading Now : 66

🔊To listen to this news in Tamil, Please select the text.

பெரிக்காத்தானைச் சேர்ந்த முன்னாள் உள்துறை அமைச்சர் Hamzah Zainuddin (ஹம்ஸா ஸைனுடின்) தம்மிடம் ஆளும் கூட்டணித் தலைவர்கள் மீதான முறைகேடுகள் சம்பந்தப்பட்ட கோப்புகள் இருப்பதாகக் கூறியிருப்பது ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என சட்டத்துறைத் துணையமைச்சர் ராம்கர்ப்பால் சிங் குறிப்பிட்டார்.
அதனைத் தக்க சமயத்தில் பயன்படுத்தப் போவதாக அவர் அச்சுறுத்தி இருப்பது அதிகாரத் துஷ்பிரயோகம் என்று குறிப்பிட்ட அவர், அது சம்பந்தமாகப் புகார் பெறப்பட்டால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
மக்களவையில் அவர் மேலும் குறிப்பிடும்போது, இந்திய சமூகத்தின் மேம்பாட்டுக்காக மித்ராவுக்கு வழங்கப்படும் நிதியில் பண மோசடி செய்த வழக்கில் 33 கோப்புகள் திறக்கப்பட்டு, 10 பேர் மீது நீதிமன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதோடு, எஞ்சிய வழக்குகளின் விசாரணை மேலும் தொடர்வதாகவும் ராம்கர்ப்பால் சிங் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles