
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஊழல் வழக்குகளை எதிர்நோக்கியிருக்கும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அமாட் ஸாஹிட் ஹமிடியின் வழக்குகளை மீட்டுக் கொள்ளும் வகையில் தாம் அதில் தலையிட்டது கிடையாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்களவையில் தெரிவித்தார்.
ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எந்த அரசியல்வாதியின் வழக்கிலும் அரசு தலையிடாது என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பழி வாங்கும் நோக்கில் வழக்குகளைத் தாம் ஏவி விடுவதாகக் கூறுவது பொய்யான குற்றச்சாட்டு என்றும் அது தவிர்க்கப்பட வேண்டுமென்றும் அன்வார் கேட்டுக் கொண்டார்.



