
🔊To listen to this news in Tamil, Please select the text.
முஸ்லிம் உணவகங்களில் பரிமாறப்படும் உணவுகளில் தண்ணீரைத் தவிர மற்றலெல்லம் ஆரோக்கியமற்றவை என்று மருத்துவர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்தக் குற்றச்சாட்டு அபத்தமானது, முஸ்லிம் உணவகங்களின் வர்த்தகத்தை சீர்குலைக்கும் கெட்ட நோக்கம் கொண்டது. பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வரும் முஸ்லிம் உணவகங்களின் உண்மை நிலையை உணராமல் இந்த வீடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிராக முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கத்தின் 12,000 உறுப்பினர்கள் கடுமையான கண்டனத்தை வெளியிட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.
இந்த வீடியோவை வெளியிட்டவரின் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்த தமது உறுப்பினர்கள் நாடு முழுமையிலும் உள்ள போலீஸ் நிலையங்களில் புகாரை அளித்து வருவதாக அச்சங்கத்தின் தலைவர் டத்தோ Jawahar Ali (ஜவகர் அலி) செந்தூல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தபோது தெரிவித்தார்.



