
🔊To listen to this news in Tamil, Please select the text.
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் புதல்வர் Nazifuddin Najib (நஸிஃபுடின் நஜிப்) லங்காவி அம்னோ தலைவராக குறைந்த பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்த Nor Saidi Nanyan (நோ ஸைடி நன்யானுக்கு) 236 வாக்குகளும் நஸிஃபுடினுக்கு 246 வாக்குகளும் கிடைத்தன.
அம்னோவில் இளைஞர் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற நஸிஃபுடின், கடும் போட்டியில் லங்காவியில் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர், நஜிப்பின் Nooryana Najwa புதல்வி (நூர்யானா நஜ்வா), புத்ரி அம்னோவின் ஆட்சிக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்- பட்டது குறிப்பிடத்தக்கது.



