
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஜானா விபாவா பொருளாதாரத் திட்டத்தில் 2 மில்லியன் முறைகேடு செய்த நபர் ஒருவரை வழக்கிலிருந்து விடுவிக்க லஞ்சம் வாங்கிய சந்தேகத்தின் பேரில் நீதிமன்ற முன்னாள் துணைப் பதிவாளர் ஒருவரை ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.
நேற்று முன்தினம் வாக்குமூலம் தர எம்ஏசிசி தலைமையகத்திற்கு வந்த அவர் கைது செய்யப்பட்டு 3 நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் 2021இல் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இதற்கு முன்னர், ஜானா விபாவா திட்டத்தில் நிதி முறைகேடு செய்ததாக முஹிடின் யாசின் மற்றும் பெர்சத்து தலைவர்கள் இருவர் மீதும் ஊழல் குற்றம் சுமத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.



